முற்போக்குவாதிகளின் ‘’பிற்போக்கு” பெண்ணியம்
காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணோடு உறவு என்பதோடு நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் மிகப்பெரிய சவால்.
தன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எளிதாக சமாளிக்க முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி காதால் கேட்க முடியாத வசையின் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய சுதந்திரம் கிராமத்துக் பென்களுக்கு இருக்கிறது.சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் ஒன்றல்ல இரண்டல்ல... வெறித்துப் பார்ப்பவர்கள், பேருந்துகளில் உரசுபவர்கள், முகத்துக்குக் கீழே மேய்ந்து கொண்டே பேசுபவர்கள், இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டு நூல் விடுபவர்கள் என வகை வகையாகத் திரிகிறார்கள் ஆண்கள். ஓர் ஆண் பெறும் பதவி உயர்வை - திறமைக்குக் கிடைத்த பரிசாகப் பேசும் ஆண்கள், அதே பதவி உயர்வு ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால், ‘படுக்கையறை வழியாகப் பெற்றாள்’ என்று இழித்துப் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். ஆம் எப்போதும் இவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.
அதுவும், படித்த முற்போக்கான, பெண்ணியம் பேசக்கூடிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வரைமுறையற்றவை. பெண்ணியம் பேசுகிறாள் என்றாலே, எப்போதும் யாருடனும் உறவுக்குத் தயாராக இருப்பாள் என்ற எண்ணம்தான் இங்கே இருக்கிறது. பெண்ணியம் பேசுகிற பெண் தானே என்று தவறாக நடக்க முயன்று ‘புரட்சியாளர்’ ஒருவர் அடிவாங்கிய கதை தெரியும் தானே.. அந்த புரட்சிப்புலி (புலி அவருக்கு பிடிக்காதே?) இப்போது பெண்ணியக் கருத்துக்களை கேட்போர் காதுகளில் ரத்தம் வடிய பேசிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் வழியில் நிற்கிறேன் என்ற தம்பட்டம் வேறு அடித்துக் கொண்டிருக்கிறது.
யார் என்று ஆர்வமாக இருக்கிறதா? ஷோபாசக்தி தான் அந்த புரட்சியாளர். இவர் பாலியல் சுதந்திரம் பேசுவது பெண்களை படுக்கையறையில் தள்ளுவதற்குத்தான் போலிருக்கிறது. பாலியல் விடுதிகளுக்குப் போய் வந்த அனுபவங்களை ‘முற்போக்கு’ முலாம் பூசி கதைகளாகக் கட்டுவதன் பின்னே இருப்பது, பெண்ணியம் அல்ல; ‘எவ கிடைப்பா?’ என அலையும் ஆணாதிக்க தடித்தனம்.
பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து - பாலியல் ஒர்மை கடந்து சிந்தித்தவராக - பெரியார் மிகப் பிரம்மாண்டமாக நிற்கிறார். ஆனால், பெரியார் பேரை சொல்லிக் கொண்டு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் ஆண்களின் முகங்களைக் கிழித்தால் உள்ளே இருப்பது பாலியல் வக்கிரம் மட்டுமே. இவர்கள் பேசும் பாலியல் சுதந்திரம் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போவதில்லை. இவர்கள் தங்களது இச்சைகயை எளிதாகத் தீர்த்துக் கொள்வதற்குத்தான் பெண்ணியத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகிறார்கள்.
தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்குப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை.
காரல் மார்க்ஸ், சே குவேராவின் பாலியல் வாழ்க்கையை எல்லாம் தோண்டித் துருவி பேசும் இவர்கள், தமது சொந்த வாழ்க்கையில் எப்படி நியாயமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஒரு நாளும் பேசுவதில்லை. ஏனென்றால் கடைசி வரைக்கும் ஆண்களாகவே வாழ்கிறார்கள். They are always men.
இவர்கள் தான் அருந்ததி ராய் மீது சேறடிக்கிறார்கள். இடதுசாரித் தலைவர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ம.க.இ.க. தோழர்களை நக்கலடிக்கிறார்கள்.
ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவர்களோடு போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
நன்றி : Priya Thambi


சாட்டையடி பதிவு...
இல்லை...ஒரேயடியாக ஒரு பாலரை மட்டும் குற்றம் சுமத்துவது தவறு.. வேலை பார்க்கும் நிறுவனங்களில் பெண்கள் பல்லைகாட்டி (வேறு அர்த்தத்தோடு )பேசுவதை நானே பார்த்துருக்கிறேன்... அதனால் தவறு இரு பக்கமும் இருக்கிறது. அது போக யார் ஒருவர் தப்பு செய்ய துணியும்போது இந்த சமுதாயத்தால் கண்காணிக்க படுவார்கள்...அப்பொழுது இதுபோல ஒருசாராரை குறை சொல்லுவர்..(நீங்கள் தவறாக என்ன வேண்டாம்)