gravatar

கருப்பு பண உலகின் தாதா... மும்பையை கலக்கும் மிகப்பெரும் கான் ..


புனே நகரில் ஒரு குதிரைப் பண்ணை வைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்துவரும் இவன், சுவிஸ் வங்கியின் பல்வேறு (நபர்களின்) கணக்குகளில் கொண்டு சென்று குவித்த பணம் 8 பில்லியன் டாலர்கள்! ஆங்கில கணக்குப்படி ஒரு பில்லியன் என்றால் இந்திய கணக்கில் நூறு கோடி. ஒரு டாலருக்கு ரூ.45 என்று வைத்துக்கொ்ள்ளுங்கள். இவர் நாடு கடத்திய பணம் இந்திய ரூபாயில் 4,500 கோடி!

இவ்வளவு பணம் கடத்தி சுவிஸ் வங்கிக் கணக்கில் போட்ட இந்த மகான் அதற்காக பெற்ற கமிஷன் வருவாய் தொடர்பாக வருமான வரி எதுவும் செலுத்தவில்லை. செலுத்தவில்லை என்றால் எப்படி? வருமான வரி விவரமே தாக்கல் செய்யவில்லை!

இவரைப் பற்றி அறிந்ததும் வருமான வரித்துறையும், சட்ட அமலாக்கப் பிரிவும் (Enforcement Directorate), சுவிஸ் அரசிற்கு கடிதம் எழுதின. “இவர் இந்தியாவில் இருந்து எவ்வளவு பணத்தை அங்கு கொண்டு வந்த சேர்த்தார் என்ற விவரங்களைத் தாருங்கள், இவர் இந்தியாவில் வருமான வரி செலுத்தவில்லை, அதற்கான விவரம் கூட தாக்கல் செய்யவில்லை. அது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம்” என்று கூறி, விவரம் கேட்டன.

வந்தது பதில். “வருமான விவரம் தாக்கல் செய்யாமை உங்கள் நாட்டில் குற்றமாக இருக்கலாம், எங்கள் நாட்டில் (சுவிட்சர்லாந்தில்) குற்றமில்லை. எனவே அந்நாரை பற்றிய விவரம் எதுவும் தர முடியாது” என்று அந்த ஜனநாயக நாடு பதில் போட்டுவிட்டது.

2007ஆம் ஆண்டு வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் ஹசன் அலி கான் வீட்டில் சோதனை நடத்தியபோது சிக்கிய ஆவணங்களையும் அந்தக் கடிதத்தோடு சுவிஸ் அரசிற்கு அனுப்பி வைத்தார்கள். அதனை போலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்கள் (Forged documents) என்று சுவிஸ் அரசு கூறி நிராகரித்துவிட்டதாம். என்னே பரிதாபம் இந்திய நாட்டிற்கு! அதற்கு மேல் வருமான வரித்துறையும், அமுலாக்க பிரிவும் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் ‘அட போடா’ என்று விட்டுவிட்டார்கள்.

இவர் நாடு கடத்திய பணத்திற்கு வருமான வரி மட்டும் எவ்வளவு செலுத்தியிருக்க வேண்டும் தெரியுமா? கபாலி கான் ரேஞ்சுக்கு கதை விடலையப்பா, மத்திய அரசு பிரபல ராஜ்சபாவில் சொன்னது: ரூ.50,000 கோடி. வட்டியோடு, தாமத அபராதம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் ரூ.70,000 கோடி!

ஹசன் அலி கான் புனேயில் ஜாலியாக குதிரை பண்ணை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நபர்களே பார்க்க முடியாத மில்லினியர்களை எளிதில் நெருங்ககூடியவன்..
இதுவரை இவனை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த மத்திய அரசு...
இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னரே நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன ..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி :  Gandhi Vellaichamy

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------